டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பை ஆசாத் மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மகாராஷ்டிர விவசாயிகள்

0 838
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பை ஆசாத் மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மகாராஷ்டிர விவசாயிகள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் குடியரசு நாளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிர விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் நாசிக்கில் இருந்து கால்நடையாக மும்பைக்குப் பேரணியாகச் சென்றனர்.

ஆசாத் மைதானத்தில் திரண்டுள்ள அவர்கள், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி மாநில ஆளுநரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments