கொரோனா சூழலில் உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்வு- ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வறிக்கையில் தகவல்

0 3216
கொரோனா சூழலில் உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்வு- ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வறிக்கையில் தகவல்

கொரோனா சூழலில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆக்ஸ்பாம் என்கிற லாப நோக்கற்ற அமைப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துச் சமத்துவமில்லா வைரஸ் என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள், விளிம்புநிலைச் சமுதாய மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கோடிக்கணக்கானோர் வேலையிழந்ததால் வறுமையிலும் பட்டினியிலும் வாடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கல்வி, நலவாழ்வு, சிறந்த வாழ்க்கை ஆகியன கிடைப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 18 முதல் டிசம்பர் 31 வரையான காலத்தில் உலகின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், முதல் 10 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 39 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments