ஜன.29 முதல் புதிய வியூகத்துடன் பிரச்சாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 4619
ஜன.29 முதல் புதிய வியூகத்துடன் பிரச்சாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

னவரி 29ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார். மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளதாகவும், பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சிக்கு வந்தவுடன் தனியாக துறை உருவாக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருகிற 29-ம் தேதி முதல் புதிய வியூகத்தில் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அடுத்த 30 நாட்களுக்கு 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாகவும் கூறினார்.

மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதே தமது முதல் பணி எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண ஒதுக்கப்படும் என்றார்.

பிரச்சாரத்தின் போது, மக்கள் தங்கள் குறைகளை எழுத்துப் பூர்வமாக வழங்கும் வகையில் படிவம் விநியோகிக்கப்படும் என்றும், அதில் பங்கேற்க இயலாதோர், செல்போன் செயலி அல்லது இணையதளம் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண, தனித்துறை உருவாக்கப்படும் என உறுதியளித்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 1 கோடி குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், கொரோனா காலத்தில் மக்களை அரசு கைவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments