சாதனை விருது பெறும் குழந்தைகளுடன் மோடி இன்று கலந்துரையாடல்

0 598
சாதனை விருது பெறும் குழந்தைகளுடன் மோடி இன்று கலந்துரையாடல்

சாதனை விருது பெறும் குழந்தைகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.

நாடு முழுவதும் கண்டுபிடிப்பு, விளையாட்டு, கலை, கலாசாரம், சமூக சேவை, கல்வி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான சாதனை படைக்கிற குழந்தைகளுக்கு பிரதம மந்திரி ராஷ்டிரிய பாலபுரஸ்காரின் கீழ், பாலசக்தி புரஸ்கார் விருது வழங்கி மத்திய அரசு சிறப்பிக்கிறது.

இந்த ஆண்டு இவ்விருதுக்கு 32 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது பெறுகிற குழந்தைகளுடன் பிரதமர் மோடி, இன்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடுகிறார்.

தமிழகத்தில் மரக்கன்று நடுவதில் சாதனை படைத்து வருகிற 7 வயது சிறுவன் பிரசித்தி சிங், இந்த விருது பெறுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments