எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 13 பேர் சைக்கிள் பேரணி : 66 நாட்களில் சுமார் 4090 கி.மீ. தூரத்தை கடக்கத் திட்டம்

0 652
எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 13 பேர் சைக்கிள் பேரணி : 66 நாட்களில் சுமார் 4090 கி.மீ. தூரத்தை கடக்கத் திட்டம்

எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 13 வீரர்கள் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் சைக்கிள் பேரணி நடத்தினர்.

வடக்கு பர்கானா மாவட்டம் பசிராத் என்ற இடத்தில் கடந்த 10ந் தேதி தொடங்கிய இந்தப் பேரணி, அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட இந்தோ- வங்கதேச எல்லையில் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து மார்ச் 17ம் தேதி வங்கதேசத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் பிறந்தநாளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இருநாட்டு எல்லையில் உள்ள ஃபுல்பாரி என்னுமிடத்தை வீரர்கள் வந்தடைந்தபோது, ராணுவ உயரதிகாரிகள் வரவேற்று  வாழ்த்து தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments