டெல்லி விமான நிலையத்தில் 68 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்த 2 வெளிநாட்டினர் கைது

டெல்லி விமான நிலையத்தில் 68 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்த 2 வெளிநாட்டினர் கைது
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 68 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்த 2 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தோகா வழியாக டெல்லி வந்த உகாண்டாவை சேர்ந்த இருவரிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்கள் கொண்டு வந்த பைகளில் 51 பொட்டலங்களில் 9 புள்ளி 8 கிலோ அளவில் வெள்ளை நிற பவுடர் இருந்தது.
அதை பரிசோதித்தபோது, ஹெராயின் என உறுதி செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு 68 கோடி ரூபாயாகும்.
இந்திய விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய ஹெராயின் கடத்தல் இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
Comments