முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு புதிய மனு; அணைப் பராமரிப்புக்கு புதிய விதிமுறைகளை வகுக்க கோரிக்கை

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு புதிய மனு; அணைப் பராமரிப்புக்கு புதிய விதிமுறைகளை வகுக்க கோரிக்கை
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அணையின் பராமரிப்புக்கு தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகள் மிகவும் பழமையானவை என்றும், அணை தொடர்பான முழு விவரங்களை கேரளாவுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பு கருதி விரைவில் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது. கேரள அரசு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழங்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
Comments