"உங்கள் ஊரில் ஸ்டாலின்" : 234 தொகுதிகளிலும் 30 நாள் சூறாவளி பிரசாரம் செய்ய மு.க.ஸ்டாலின் திட்டம்.!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
தேர்தல் சுற்றுப்பயண விவரம், அநேகமாக திங்கட்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராம சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், அடுத்த கட்டமாக "உங்கள் ஊரில் ஸ்டாலின்" எனும் பெயரில், 234 தொகுதிகளிலும் மொத்தம் 30 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன்படி, நாளொன்றுக்கு 6 முதல் 8 தொகுதிகளில் பொதுக்கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments