கூட்டணிப் பேச்சை விரைந்து நடத்தி முடிக்க அதிமுகவுக்கு பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

0 2637

கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு பற்றி விரைவில் பேசி முடிக்க வேண்டும் என அதிமுகவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேமுதிக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பிரேமலதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிப் பேச்சை விரைந்து நடத்தி முடிக்காவிட்டால் தேமுதிக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments