போரூர் அருகே இயங்கும் மதுரவாயல் - தாம்பரம் சாலை டோல்கேட் சூறை

0 93212

சென்னை மதுரவாயல் - தாம்பரம் புற வழிச் சாலையில் போரூர் அருகே இயங்கி வரும் சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கி, சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

கார் மற்றும் ஆட்டோவில் வந்த 8 பேர் கும்பல், கண் இமைக்கும் நேரத்திற்குள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் கண்ணாடி பூத்களை உடைத்து நொறுக்கி விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

கடந்த 19 ஆம் தேதி அதிகாலை கால் டாக்சி ஓட்டுநர் மண்ணிவாக்கம் பாபு என்பவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தகராறு ஏற்பட்டுள்ளது.  சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சியை வைத்து பிடிக்க, போலீசார் முயன்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments