பெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எரிவாயு.... அறியாமையால் போன உயிர்

0 44792

கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், பெட்ரோல் டேங்க்குக்குள் மின் விசிறியை இறக்கி, வாயுவை வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் ஏ.ஆர்.ஏ.எஸ். அண்ட் கோ ( AR.A.S & CO ) என்ற பெயரில் பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. அங்கு நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்க்குகளில் ஒன்றை சுத்தம் செய்வதற்காக அதன் மூடியை தொழிலாளர்கள் திறந்துள்ளனர்.

நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாகக் கூறப்படும் அந்த டேங்க்கில் வாயுவாக உருமாறியிருந்த திரவ பெட்ரோல், மூடியை திறந்ததும் ஆவியாக நெடியுடன் வெளியேறி இருக்கிறது. அதனை சாதாரண தூசிப் புகை என எண்ணிய தொழிலாளர்கள், வாயுவை வெளியேற்றுவதற்காக சிறிய வகை மின்விசிறியை ஒரு கம்பியில் கட்டி உள்ளே இறக்கியுள்ளனர்.

மின் விசிறியை ஆன் செய்ததும், அதில் சிறு தீப்பொறி உருவாகி எரிவாயு வெடித்ததில் மின்விசிறி தூக்கி வீசப்பட்டு, ரகு என்ற தொழிலாளியின் முகத்தில் அடித்தது. முகம் சிதைவுற்ற ரகு பரிதாபமாக உயிரிழந்தார். ஜஸ்டின் என்பவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். பெட்ரோல் டேங்க்கை திறந்ததும் ஒரு மணி நேரம் அப்படியே விட்டிருந்தால் வாயு வெளியேறி இருக்கும் என தீயணைப்புத்துறையினர் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments