27 மனைவி 150 குழந்தைகளுடன் ஒருவர் கூட்டுக்குடும்பம்... யாரு சாமி இவரு!

0 13456

யாரு சாமி இவரு என்று கேட்கும் அளவிற்கு, ஒன்றல்ல, இரண்டல்ல 27 மனைவிகளுடன் கனடாவிலுள்ள, பவுண்டிஃபுல் பகுதியில் வசித்து வருபவர் தான் வின்ஸ்டன் பிளாக்மோர்.

64 வயதாகும் வின்ஸ்டன் பிளாக்மோரும், 27 மனைவிகளும், 150 குழந்தைகளும்  ஒரே வீட்டில்,  வானத்தைப்போல படத்தில் வரும் விஜயகாந்தின் குடும்பம் போல, கூட்டு குடும்பமாய் வாழ்ந்து வருகின்றனர். 

திருமணத்துக்கு பின்னர், ஒருவரின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். கணவன்மார்கள், மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது, அவர்களை மகிழ்விப்பது என மொத்தமாக மாறிப்போவர்கள். பலரிடம் திருமண வாழ்வு குறித்து கேட்டாலே, சலிப்புடன் தான் பதில் வரும்.ஆனால் இந்த கதையோ வித்யாசமானது.....

சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுடன் பாலிகேமி( Polygamy ) முறையில், மகிழ்ச்சியாக, ”எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்று வின்ஸ்டனின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

பாலிகேமி( Polygamy ) என்பது கணவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் முறை. இதைத்தான் வின்ஸ்டன் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்.

வின்ஸ்டனின் 17ஆவது மனைவியின் மூத்த மகன் மெர்லின். இவரின் மூலம் தான் ”மெகா குடும்பம்” பற்றியான தகவல் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் வசித்து வரும் பிளாக்மோரின் மகன் மெர்லின், டிக்டாக்கில் தனது குடும்பத்தினர் போட்டோக்களை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம் . ஆனால் சமீபகாலமாக தான் வேலை நிமித்தமாக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருவதாக தெரிவித்தார்.

தன் அம்மாவை ‘மம்’ எனவும், அப்பாவின் பிற மனைவிகளை ‘மதர்’ அழைப்பதாக பதிவுட்டுள்ளார் மெர்லின். 3 குடும்பத்தை சேர்ந்த அக்கா மற்றும் தங்கைகளை தனது தந்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், பிற சகோதர, சகோதரிகளை போல தாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது அப்பாவுக்கு, அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் ‘எம்’ என்கிற ஆங்கில எழுத்தில் துவங்கும் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தேவையான காய்கறிகளை நாங்களே விவசாயம் செய்து அறுவடை செய்து கொள்வோம்’ என்று மெர்லின் கூறியுள்ளார்.

ஒரு மனைவியை வைத்தே வாழ்கையை நடந்துவது கடினம். இன்னும் சிலருக்கோ ஒரு மனைவிக்கே வழியில்லை. இந்த நிலையில் இத்தனை மனைவி மற்றும் குழந்தைகளையும் சமாளித்து, வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கும் இவரை பார்த்தால் பொறாமையாக உள்ளதாக வலைத்தளவாசிகள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments