நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை குடியரசு தின கொண்டாட்டம், கண்காணிப்பு வளையத்துக்கு கீழ் கொண்டுவரப்பட்ட எல்லைகள், விமான நிலையங்கள்

0 937
நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், எல்லைப் பகுதிகள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், எல்லைப் பகுதிகள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஊடுருவலை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

அதேபோல, டெல்லி, கொச்சி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள், அதன் சுற்றுப்புறங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றது. கூடுதல் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments