சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்பு

0 1079

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஷான்டோங்(Shandong) மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கி, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், 11 பேர் உயிருடன் உள்ளதாகவும், எஞ்சிய 10 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், கடும் போராட்டத்துக்கு பின் பூமிக்கடியில் இருந்து 11 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், காணாமல் போன 10 பேர் சுரங்கத்தின் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சிக்கி கொண்டுள்ளதாகவும், இவர்களை மீட்க மேலும் 2 வாரங்களாகும் எனவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments