பாண்டி ஜுஸ் எனக் கூறி 50,000 ரூபாய் மதிப்புள்ள சாராயம் கடத்தல்: அமமுக இளைஞரணி செயலாளர் கைது

நாகை மாவட்டம் கங்களாஞ்சேரியில் பாண்டி ஜுஸ் எனக் கூறி ஆயிரம் பாக்கெட் சாராயத்தைக் காரைக்காலிலிருந்து கடத்திய அமமுக இளைஞரணி செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வேகமாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் சிக்கிய 50,000 ரூபாய் மதிப்புள்ள பாண்டி ஜுஸ் என அச்சிடப்பட்டிருந்த ஆயிரம் பாக்கெட் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சர்புதீன் என்பவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காரைக்கால் மாவட்ட இளைஞரணி செயலாளர் என்பதும் திருவாரூருக்கு விற்பனைக்காக சாராயத்தைக் கடத்திச் சென்றதும் தெரியவந்துள்ளது.
Comments