வங்கியின் லாக்கர் அறைக்குள் சிக்கிய ஓய்வு பெற்ற வட்டாட்சியர்

0 32468

திருச்சியில் வங்கியின் லாக்கர் அறைக்குள் சிக்கிய ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியரான வேணுகோபால், தான் லாக்கரில் வைத்துள்ள நகைகள், ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, கார்ப்பரேஷன் வங்கிக்கு சென்றுள்ளார். லாக்கரை சரிபார்த்துவிட்டு வெளியே வர முயன்ற போது அந்த அறையின் கதவு வெளிப்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

நீண்ட நேர முயற்சிக்கு பின், தனது செல்போன் மூலம் வங்கி எண்ணுக்கு அழைத்து நடந்தவற்றை வேணுகோபால் கூறவே, விரைந்து வந்த வங்கி ஊழியர்கள், வியர்த்த நிலையில் நின்றிருந்த வேணுகோபாலை மீட்டு ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வங்கி ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி புகார் மனு ஒன்றையும் வேணுகோபால் அனுப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments