குளத்தில் ஆழம் தெரியாமல் குளித்த தாய், மகள் உட்பட 3 பேர் மூழ்கி உயிரிழப்பு

0 2763
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே தாய், மகள் உட்பட மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே தாய், மகள் உட்பட  மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

காவேரி செட்டிப்பட்டியை சேர்ந்த ராதா என்பவர், தனது மகள் பவ்யா மற்றும் பக்கத்து வீட்டு சிறுமி சரஸ்வதி ஆகியோருடன் அருகேவுள்ள குளத்தில் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஆழமான பகுதி என்று தெரியாமல் சென்ற அவர்கள் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மணல் கொள்ளையர்களால் குளத்தில் ஆழமான பள்ளம் இருப்பதுடன்,10 வருடத்திற்கு பின் தற்போது குளம் நிரம்பியதால் ஆழம் தெரியாததே விபத்துக்கு காரணமென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments