ராஜஸ்தான் பெண்ணுக்கு ஆகஸ்டில் இருந்து தொடர்ந்து கொரோனா: 31 முறை சோதித்தபோதும் கொரோனா உள்ளதாகவே முடிவு

0 6888

ராஜஸ்தானின் பரத்பூரில் ஒரு பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இதுவரை 31 முறை சோதித்தபோதும் கொரோனா தொற்றுள்ளதாகவே முடிவு வந்துள்ளது.

பரத்பூரைச் சேர்ந்த 32 வயதுப் பெண்ணுக்கு முதன்முறையாக ஆகஸ்டு 24ஆம் நாள் சோதனை செய்தபோது கொரோனா தொற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டபோதும் கொரோனா தொற்றுள்ளதாகவே முடிவு வந்துள்ளது.

14 முறை விரைவுச் சோதனையும், 17 முறை ஆன்டிஜென் சோதனையும் செய்தும் அத்தனை முறையும் கொரோனா உள்ளதாகவே தெரியவந்துள்ளது. மனநலமும், நோய் எதிர்ப்பாற்றலும் குன்றிய அந்தப் பெண்ணை ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைத்துத் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments