கடின உழைப்பு நிச்சயமாக ஒருவரை உயர்த்தும்- கிரிக்கெட் வீரர் நடராஜன்

கடின உழைப்பு நிச்சயமாக ஒருவரை உயர்த்தும்- கிரிக்கெட் வீரர் நடராஜன்
ஆஸ்திரேலியாவில் வெற்றிக் கோப்பையை ஏந்திய தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்ட பின் பேசிய அவர், முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல இருந்ததாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
கடின உழைப்பு ஒரு நாள் நிச்சயம் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எனக் கூறிய நடராஜன், தனக்கு கிடைத்த வெற்றிக்கு மக்களின் உற்சாகமும் மிக முக்கிய காரணம் என்றும் உருக்கமாக கூறினார்.
Comments