மேலும் 7 மாநிலங்களில் வரும் வாரத்தில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் - மத்திய நலவாழ்வு அமைச்சகம்

0 561
வரும் வாரத்தில் மேலும் 7 மாநிலங்களில் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரும் வாரத்தில் மேலும் 7 மாநிலங்களில் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ஆம் நாள் தொடங்கியது. சனிக்கிழமை வரை 27 மாநிலங்களில் மொத்தம் 15 லட்சத்து 82 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவற்றில் 12 மாநிலங்களில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கேரளம், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 7 மாநிலங்களில் வரும் வாரத்தில் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments