“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..!

0 11171
“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..!

தட்டின் அழகை மேம்படுத்திக் காட்ட பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கும் நகத்தை அழகை கூட்ட பயன்படுத்தப்படும் நெயில் பாலிஷும் தரமானதாக இல்லை என்றால் பல்வேறு சரும பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், வேலைக்குச் செல்லும் பெண்களின் முகத்தில் பொலிவும், தெளிவும் அவசியமாகிறது. அந்தப் பொலிவையும் தெளிவையும் பெற அவர்கள் பல்வேறு ஒப்பனைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் பிரதான இடம் வகிப்பது லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயமும் நெயில் பாலிஷ் எனப்படும் நகச்சாயமும் தான்.

உதட்டில் லிப்ஸ்டிக் மட்டுமின்றி லிப் பிளம்பர்ஸ், லிப் ஃபார்ம், லிப் லைனர் போன்றவை பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த உதட்டுச் சாயத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் விதமாக ப்ரொபைல் கேலிட், கோலோ போனி மற்றும் விளக்கெண்ணெய் செய்ய பயன்படுத்தப்படும் ரைசினால் கேசீட் உள்ளிட்ட திரவங்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. தரமான தயாரிப்புகளாக இல்லாதபட்சத்தில் இந்த ரசாயனங்கள் ஒவ்வொன்றும் தோலில் ஒவ்வொரு வகையான அலர்ஜியை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்...

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் குறித்து குறிப்பிடப்படுவதில்லை என்றும் ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் பயன்படுத்தப்படும் லிப்ஸ்டிக்குகளில் அதுகுறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் டாக்டர். வானதி கூறுகிறார்.

இதேபோல் நகச்சாயம் எனப்படும் நெயில் பாலிஷிலும் ஏராளமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நாட்களாக நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்களின் நகத்தின் நிறம் மாறும் என்று கூறும் மருத்துவர்கள், தரமற்ற நெயில்பாலிஷ் தடவப்பட்ட கைகளைக் கொண்டு உடலின் மற்ற பாகங்களை தொடும்போது அங்கும் அலர்ஜி ஏற்படும் என்கின்றனர்.

அதேபோல் மெனிக்கியூர் எனப்படும் கை நகங்களை சுத்தம் செய்யும்போது கியூட்டிக்கல் எனப்படும் நகம் உருவாகும் இடத்திலுள்ள சதைப்பகுதியை நீக்குகின்றனர் என்று கூறப்படுகிறது. இது விரல்களை கிருமிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கும் என்றும் டாக்டர். வானதி கூறுகிறார்.

தரமான ஒப்பனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறும் மருத்துவர்கள், தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி அலர்ஜி ஏற்பட்டால் தாமதிக்காமல் தோல் நோய் நிபுணர்களை அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சுயமாகச் சென்று மருந்துகள் வாங்கி பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments