மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வருவேன் - டிரம்ப்

0 5095
மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வர உள்ளதாக அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெற்ற டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வர உள்ளதாக அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெற்ற டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை புறக்கணித்து வெள்ளை மாளிகையில் இருந்து டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.

தனது மனைவி மெலானியாவுடன் ஹெலிகாப்டரில் ஆண்ட்ருஸ் விமானப் படை தளத்தில் வந்திறங்கிய டிரம்ப், அங்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமானவற்றை தனது அரசு சாதித்துள்ளதாக தெரிவித்தார். புதிய அரசு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போதிலும், இந்த நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்று டிரம்ப் கூறினார்.

தனது உரையை நிறைவு செய்த பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் டிரம்ப் வழியனுப்பி வைக்கப்பட்டார். புளோரிடாவிலுள்ள தனது வீட்டிற்கு விமானத்தில் டிரம்ப் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments