திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கோணாம்பேடு என்ற இடத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், விவசாய கடன் தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்து போட இருப்பதாக தெரிவித்தார்.
திமுக, இந்துக்களுக்கு எதிரான கட்சி என பரப்பப்படும் பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்தார். பொது வாழ்வில் 50 ஆண்டு கால அரசியல் வரலாறு தமக்கு உள்ளதாக பொங்கல் விழாவில் உரையாற்றியபோது மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Comments