மழை நீர் சூழ்ந்த தென் தமிழகம்... எங்கும் வெள்ளப்பெருக்கு

0 6847
மழை நீர் சூழ்ந்த தென் தமிழகம்... எங்கும் வெள்ளப்பெருக்கு

மாலத்தீவு அருகே வளிமண்டலத்தில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக  தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை நீடித்து வருகிறது. 

கொட்டி தீர்க்கும் கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்ததால், அவ் வளாகம் குளம் போல் காட்சி அளிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்அருவி, புலியருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 3- வது நாளாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் கூமாப்பட்டி - பிளவக்கல் அணை செல்லும் கோவிந்த மேடு பாலம், பட்டுப்பூச்சி பாலத்திற்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் தவித்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடரும் மழை காரணமாக அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி,கரடி சோலை அருவி,பாம்பார்புரம் அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வெள்ளியை உருக்கியது போல பெருக்கெடுத்து ஓடுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் அசுரதனமாக நீர்வரத்து அதிகரித்து, கொட்டியது. இதனால், குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments