எந்த வல்லரசும் நாட்டின் பெருமைக்கு ஊறு விளைவித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

எந்த வல்லரசும், இந்திய திருநாட்டின் பெருமைக்கு ஊறு விளைவித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இந்திய விமானப்படையின் பயிற்சிப் பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய அவர், சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் எந்த வல்லரசும், இந்திய திருநாட்டின் பெருமைக்கு ஊறு விளைவித்தால் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 83 தேஜஸ் இலகு வகைப் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம் ஐம்பதாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
Comments