தமிழகக் கலாச்சாரம் இந்தியாவின் ஆன்மாவைப் போன்றது; அதை யாராலும் அழிக்க முடியாது - ராகுல்காந்தி

0 2005
தமிழகக் கலாச்சாரம் இந்தியாவின் ஆன்மாவைப் போன்றது; அதை யாராலும் அழிக்க முடியாது - ராகுல்காந்தி

தமிழ்க் கலாச்சாரம் இந்தியாவின் ஆன்மாவைப் போன்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மதுரை வடபழஞ்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பொதுமக்களுடன் வரிசையில் அமர்ந்து உணவருந்தினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, தமிழ்க் கலாச்சாரம் இந்தியாவின் ஆன்மாவைப் போன்றது என்றும், அதை யாராலும் அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்றும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்பதை நேரில் கண்டு கொண்டதாகவும் குறிப்பிட்டார். வேளாண் பெருங்குடி மக்களை வஞ்சிக்கும் செயல்களில் ஒருபோதும் மத்திய அரசு ஈடுபடக் கூடாது என்றும் ராகுல் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments