கொரோனா தடுப்பூசி இயக்கத்தை ஜன.16ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி இயக்கத்தை ஜன.16ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசி இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமையன்று தொடங்கி வைக்க உள்ளதாகவும், முதல் நாளில் மூன்று லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், முதல்நாளில் மூவாயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி இயக்கம் நடைபெறும் என்றும், ஒவ்வொரு இடத்திலும் நூறு பேருக்கு என்கிற கணக்கில் மொத்தம் மூன்று லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்தார்.
படிப்படியாக ஒரு நாளில் ஐயாயிரம் மையங்களில் தடுப்பூசி போடும் வகையில் விரிவாக்கப்படும் என்றும், அடுத்த சில மாதங்களில் 30 கோடிப் பேருக்குத் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments