தைத்திருநாளாம் பொங்கல் திருநாள்.! தமிழ்நாடு முழுவதும் கோலாகலம்.!

0 951
தமிழர் திருநாளாம் தை திருநாள் தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம் தை திருநாள் தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இல்லங்களிலும், கிராமங்களிலும் மட்டுமின்றி நகரங்களிலும் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பிக்கப்பட்ட நிலையில், சமத்துவ பொங்கல் விழாக்களும் களைகட்டின.

தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படும்.

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு, பண்டிகையை மகிழ்ச்சி பொங்க மக்கள் கொண்டாடினர்.

பொங்கல் திருநாளை ஒட்டி, பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னை கோடம்பாக்கத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பஜனை கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கிராமத்தை போல் ஒன்றாக சேர்ந்து வீடுகளில் பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். 

ஈரோட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சிலம்பம் சுற்றினர். வாள் சண்டையும் செய்து காட்டினர்.

காஞ்சிபுரத்தில் விவசாயி ஒருவர் ஒரு டன் எடை கொண்ட செங்கரும்பை வைத்து பொங்கல் பானை போன்று வடிவமைத்து பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலயங்கள், கோயில்கள் முன் ஏராளமானோர் ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிரான போராட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த துணை ராணுவ படையினர் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

இலங்கை யாழ்பாணத்தில் வாழும் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments