கொரோனா வைரஸ் எங்கு, எப்படி உருவானது? ஆய்வு நடத்த சீனாவின் வூஹான் சென்றது உலக சுகாதார குழு.

0 1176

சீனாவின் வூகான் நகருக்கு சென்றுள்ள, உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு கொரோனா எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளது.

வூகான் நகருக்கு சென்றுள்ள 10பேர் கொண்ட வல்லுநர் குழு, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கள ஆய்வைத் தொடங்க உள்ளது. அதுவரை உலக சுகாதார நிறுவன குழுவினர், வீடியோகான்ஃபரன்சிங் மூலமாக சீன மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

கொரோனா உருவானது குறித்து சுதந்திரமான, பாரபட்சமற்ற, விரிவான விசாரணை நடத்த கடந்த மே மாதத்தில் தீர்மானிக்கப்பட்டது. வூகானில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதை மறுத்துவரும் சீன அரசு, ஆய்வு நடத்துவதற்கு உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்த நிலையில் தற்போது தான் அனுமதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments