பாட்னா விமான நிலையத்தின் இண்டிகோ மேலாளர் சுட்டுக்கொலை

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளாராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்பினார்.
மாலை 7 மணிக்கு வீட்டு முன் காரை நிறுத்தியபோது அடையாளந் தெரியாத ஆட்கள் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அந்தக் குடியிருப்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் அவை செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.
Comments