அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிக்கு முரணாக பேசுவதை தலைமை கவனிக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

0 4304

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக பேசி வருவதை அதிமுக தலைமை கவனித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதற்கு பதில் அளித்தார். சசிகலாவை உயர்த்திப் பேசினாலும், வால் பிடித்து பேசினாலும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவ்வாறு செயல்பட்டால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிக்கு முரணான கருத்துக்களை கூறிவருவதை தலைமை கவனித்து வருவதாகவும் ஜெயக்குமார் பதிலளித்தார்.

அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே எந்தவித சிக்கலும் இல்லை, தேர்தல் கூட்டணி உறுதியானதும், தொகுதி பங்கீடு குறித்து முடிவுசெய்யப்படும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments