பொறியியல் மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் 15 வரை பருவத் தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

0 52624
பொறியியல் மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் 15 வரை பருவத் தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு பிப்ரவரி ஒன்று முதல் 15 வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் - டிசம்பரில் நடத்தி இருக்க வேண்டிய பருவத் தேர்வு கொரோனா சூழலால் நடத்தப்படவில்லை.

இந்தத் தேர்வு பிப்ரவரி ஒன்று முதல் 15 வரை நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இணையவழியில் இந்தத் தேர்வு ஒருமணி நேரம் நடைபெறும் என்றும், அரியர் தேர்வுகளும் இதேபோல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பருவத்துக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கெனவே டிசம்பரில் நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments