முன்விரோதம் காரணமாக வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவர்கள்

முன்விரோதம் காரணமாக வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவர்கள்
டெல்லியில் முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து கடை வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த கடை வியாபாரியான அப்சலுக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆத்திரத்தில் இருந்த சிறுவர்கள், சனிக்கிழமை இரவு அப்சல் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தப்பியோடிய சிறுவர்களை கைது செய்து, துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments