தமிழகத்தில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

0 3640
தமிழகத்தில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியீட்டுள்ளது.

இதுகுறித்தஅரசின் அறிக்கையில்,கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்.

இணையதள வழி- தொலைத்தூர கற்றல் முறை தொடரும். மாணவர்கள் இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அனுமதி வழங்கலாம். தனியார் பள்ளி நிர்வாகிகள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே பள்ளிகளை திறக்கலாம்.

பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர். மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது.

அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றி திரிய அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments