தமிழ்நாட்டில் வெகுவாக குறைகிறது கொரோனா தொற்று பரவல்!

தமிழ்நாட்டில் வெகுவாக குறைகிறது கொரோனா தொற்று பரவல்!
தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல், வெகுவேகமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 673 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
821 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதேநேரம், மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை, சென்னையில் ஒரே நாளில் 192 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் புதிய பாதிப்பு இல்லாத மாவட்டமாக தொடரும் நிலையில், 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் இதுவரையில் 26 பேருக்கும், அவர்கள் மூலமாக 20 பேருக்கும், பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments