பேராசிரியரின் தில்லு முல்லு.. செக் வைத்த மாணவி..!

0 91126

சென்னையில் கல்லூரி உதவி பேராசிரியர், தன்னிடம் பயிலும் மாணவிக்கும், தனக்கும் திருமணம் நடந்தது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து மாணவியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு, சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் உதவி பேராசிரியரின் அட்ராசிட்டி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னை விருகம்பாக்கத்திலுள்ள மீனாட்சி கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிபவன் அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சதீஸ்குமார்.

ஏற்கனவே திருமணமான சதீஷ்குமாருக்கு, தன்னிடம் பயிலும் மாணவி மீது காதல் உருவாகியுள்ளது. சதீஷ்குமாரின் நடவடிக்கைகளை கவனித்த அந்த மாணவி, அவனுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்.

அப்போதும், தன்னுடைய காதலை முறித்துக் கொள்ள மனமின்றி சுற்றிய பேராசிரியர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை தொந்தரவு செய்துள்ளான். சதீஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும், ஒரு குழந்தை இருப்பதையும் சுட்டிக்காட்டி, மாணவி எச்சரித்துள்ளார்.

பேராசிரியர் என்ற போர்வையை பயன்படுத்தி, மாணவியின் குடும்பத்தினரிடமும் சகஜமாக குடும்ப நண்பர் போல் பழகி வந்த சதீஷ்குமார், தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்ள தில்லு முல்லு வேலையில் ஈடுபட்டுள்ளான்.

மாணவியின் சான்றிதழ்களை திருடி, இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது போல் போலியாக சான்றிதழ் தயாரித்த அவன், அதனை வைத்து மாணவியை மிரட்டியுள்ளான்.

மிரட்டலுக்கு மாணவி அடிபணியாததால், குடும்பத்தினரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு போலி திருமணச் சான்றிதழை அனுப்பி வைத்துள்ளான். மேலும், தன்னுடன் சேர்ந்து வாழவில்லையென்றால், இந்த போலி சான்றிதழை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்க்கையை சீரழித்து விடுவேன் எனவும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளான் பேராசிரியர் சதீஷ்குமார்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தியாகராயர் நகர் துணை ஆணையரை அணுகி, நடந்தவற்றை கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்டு விசாரணையை முன்னெடுத்த போலீசார், முதலில் போலியாக திருமண பதிவுச் சான்று பெற்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து உதவி பேராசிரியர் சதிஷ்குமார் மீது போலியாக ஆவணங்களை புனைதல், போலி ஆவணங்களின் மூலம் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த அசோக் நகர் மகளிர் போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments