இந்திய விமானப்படைக்காக ரூ.48,000 கோடி மதிப்பீட்டில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க நடவடிக்கை

0 2642

முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 83 இலகுரக தேஜஸ் போர் விமானங்களை, 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்திய விமானப்படைக்காக கொள்வனவு செய்ய, பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்கிறது. இதில், நான்காம் தலைமுறை தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட, 83 தேஜஸ் மார்க் 1A இலகு ரக போர் விமானங்களை, இந்திய விமானப்படை கொள்வனவு செய்கிறது.

48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 83 இலகுரக தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு, பிரதமர் தலைமையிலான, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments