தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் மது அருந்தக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1776

வருகிற 16 ஆம் தேதி நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு வந்த கொரோனா தடுப்பூசிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல் தடுப்பூசி போட்ட 28-வது நாள் இரண்டாவது தடுப்பூசி போடவேண்டும் என்றார்.

இரண்டாம் தடுப்பூசி போட்ட 14-வது நாள்தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்ற அவர் முதல் கட்டமாக தடுப்பூசி போடுபவர்கள் உடனேயே மது அருந்தக்கூடாது என்றார்.

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments