மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் வாய்க்காலில் இறங்கிய சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி

0 4817

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தததை கவனிக்காமல் வாய்க்காலில் இறங்கிய உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மறவக்காடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான 12 வயதான தினேஷும் 10 வயதான கௌதமும் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக வயல் பகுதிக்குச் சென்றவர்கள், அவ்வழியாகச் செல்லும் மின்கம்பி வாய்க்காலில் அறுந்து விழுந்திருப்பதைக் கவனிக்காமல் இறங்கியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

பொதுவாக மின்கம்பி அறுந்து பூமியில் விழுந்தவுடன் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். போதிய பராமரிப்பு இல்லாததால் தானியங்கி தொழில்நுட்பம் வேலை செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments