தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை: நீரில் மூழ்கிய பயிர்கள்

0 1141
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை: நீரில் மூழ்கிய பயிர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட 3 லட்சம் ஏக்கர் இலக்கையும் தாண்டி கூடுதலாக 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 3 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி அறுவடை மூலம் 5 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் இலக்கு நிர்ணயிக்கப்படிருந்த நிலையில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால்,  அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments