கர்நாடகத்தில் புதிதாக 7 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்

0 1160
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான அரசில் புதிதாக 7 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான அரசில் புதிதாக 7 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரானி, சங்கர், யோகீஸ்வரா, அங்காரா ஆகியோர் எடியூரப்பா அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் வாஜுபாய் வாலா அவர்களுக்குப் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர் விலகி பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத் தக்கது.

அவர்களில் நாகராஜ், சங்கர் ஆகிய இருவருக்கு முன்பு உறுதியளித்தபடி இப்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து அவர்களை பாஜகவில் சேர்க்க உதவிய யோகீஸ்வராவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments