பொங்கல் திருநாள்: சென்னை கோயம்பேடு சந்தையில் களைகட்டிய கரும்பு, மஞ்சள், இஞ்சி விற்பனை

0 2270
பாபநாசம்

பொங்கல் திருநாளையொட்டிச் சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள், இஞ்சி ஆகியவற்றின் விற்பனை களைகட்டியது. கோயம்பேடு சந்தைக்குக் கடந்த ஆண்டு ஆயிரம் லாரிகளில் கரும்பு வந்த நிலையில் இன்று 300 லாரிகளில் மட்டும் கரும்பு வந்தது.

இதனால் கடலூர் பண்ருட்டி கரும்புகள் 20 கொண்ட கட்டு 400 ரூபாய்க்கும், மதுரை மேலூர் கரும்புக் கட்டு 500 முதல் 600 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. மஞ்சள் குலை ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அரசே நேரடியாகக் கரும்பைக் கொள்முதல் செய்ததால் வரத்து குறைந்துள்ளதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே அனுமதி இன்றிக் கரும்பு விற்பனையில் ஈடுபட்ட வணிகர்களின் 68 வாகனங்களை அங்காடி நிர்வாக அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments