சசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த தாக்கமும் வராது - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த தாக்கமும் வராது - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை - ராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கும் சடட்ப்பேரவைத் தேர்தலில் ராயுபரம் தொகுதியில் மு.க. ஸ்டாலின் நிற்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றார்.
சசிகலாவுக்கு, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா புகழாரம் சூட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பெண்களை பற்றி பேசியதற்காகவே அவர் கருத்து வெளியிட்டு உள்ளதாக அமைச்சர் ஜெக்குமார் குறிப்பிட்டார்.
பெண்களை இழிவு படுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கூறிய அவர். சசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று தெரிவித்தார்.
Comments