தனியார் பேருந்தில் சென்றபோது மின்கம்பி உரசி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க உத்தரவு

0 3539

தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற கணநாதன் என்ற பேருந்து வரகூர் அருகே எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கியபோது, சாலையோரம் தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயையும் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments