எல்லையில் 10,000 ராணுவ வீரர்களைச் சீனா விலக்கிக் கொண்டதாகச் செய்தி... இந்தியா எச்சரிக்கையாக இருக்க பாதுகாப்புத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தல்

0 1492

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து படையினரைச் சீனா விலக்கிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழில், இந்தியாவுடன் எல்லைத் தகராறு நீடிக்கும் பகுதிகளில் இருந்து பத்தாயிரம் படைவீரர்களைச் சீனா விலக்கிக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.  அக்சாய் சின் பகுதியில் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் சீன ராணுவத்தின் பொறியாளர் பிரிவு ஈடுபட்டிருந்தது.

அப்பகுதியில் கருங்கல் சாலைகள், குளிர்காலத்தில் தங்குவதற்கான கூடாரங்கள் ஆகியவற்றை அமைத்ததுடன், தகவல் தொடர்புக்கான கண்ணாடி இழை வடங்களையும் பதித்துள்ளனர். ஏவுகணைகள், செலுத்து வாகனங்கள், பீரங்கிகள், ராடார்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும், படையினர் விரைவாகச் செல்லவும் இது வசதியாக இருக்கும்.

கடுங்குளிர் நிலவும்போது இரு நாட்டுப் படையினரும் சண்டையிட வாய்ப்பில்லை என்பதால், அங்கிருந்த படையினரைச் சீனா விலக்கிக் கொண்டதாகச் சீன நாளிதழில் குறிப்பிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments