'ஊரறிய திருமணம் செய் அல்லது சாகு'- ரகசிய சினேகிதனை கத்தியால் குத்தி கொலை செய்த காதலி

ஊரறிய திருமணம் செய்ய மறுத்த காதலரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மால்க்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாத்தாஜி . கொவ்வூரு என்ற கிராமத்தைச் சேர்ந்த பவானி என்ற இளம் பெண்ணை தத்தாஜி ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 மாதங்களான நிலையில், தங்கள் திருமணம் குறித்து தத்தாஜி ஊரார் மத்தியில் மறைத்துள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னை ஊரறிய திருமணம் செய்ய வேண்டுமென்று கணவர் தத்தாஜியை பவானி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தத்தாஜி தொடர்ந்து மறுத்துள்ளார். இதனால், தன் காதலரை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று தன் பவானியை சந்திக்க தத்தாஜி கொவ்வூருக்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து பல இடங்களில் ஊர் சுற்றியுள்ளனர்.
பின்னர், மீண்டும் பவானியை மோட்டார் சைக்கிளில் அவரின் வீட்டுக்கு அழைத்து சென்று விட தத்தாஜி சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பின் இருக்கையில் இருந்த பவானி மீண்டும் தன்னை ஊரறிய திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், தத்தாஜி மறுக்கவே, தன் கைப்பையில் மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்து தத்தாஜியின் முதுகில் ஓங்கி குத்தியுள்ளார்.
இதனால், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தத்தாஜி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கொலை செய்த பவானி எந்த பதற்றத்தையும் காட்டவில்லை. மாறாக, தத்தாஜியின் தாயாருக்கு போன் செய்து, உங்கள் மகனை கொன்று விட்டேன் , சடலம் இந்த இடத்தில் கிடக்கிறது என்று கூறியுள்ளார்.
தத்தாஜியின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு அங்கே ஓடியுள்ளனர். அப்போது, தத்தாஜியின் சடலத்தின் அருகிலேயே எந்த சலனமும் இல்லாமல் பவானி இருந்துள்ளார். மகனின் சடலத்தை கண்டு பற்றோர் பதறி துடிக்க பவானியிடத்தில் எந்த சலனமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் பவானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments