வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு என 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் 28 செ.மீ.மழையும், சேத்தியாத்தோப்பில் 21 செ.மீ. மழையும், புவனகிரியில் 20 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments