திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

0 2759
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் நத்தம் கிராமத்தில், திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கட்சியின் தலைவர் ஸ்டாலினும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் பங்கேற்றனர்.

குத்துவிளக்கேற்றி மண்பானையில் பொங்கல் வைத்து பாரம்பரிய கலை நிகழ்வுகளை அவர்கள் கண்டுகளித்தனர்.

விழாவில் பேசிய ஸ்டாலின், 7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்த ஆட்சி திமுக ஆட்சிதான் என்றும் 4 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வகை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார்.
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments