2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு

0 1240
2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தீப் பிடித்த விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சத்யா நகரைச் சேர்ந்த காசி என்ற முதியவர், காலை செக்காலை வீதியில் தனது டிவிஎஸ் எக்சல் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தனது பஜாஜ் டிஸ்கவர் வாகனத்தில் எதிரே அதிவேகமாக வந்துள்ளார்.

குமார் பேக்கரி அருகே இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் முதியவர் காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது டிவிஎஸ் எக்சல் வாகனமும் தீப்பிடித்துக் கொண்டது.

விபத்தில் தினேஷ்குமார் படுகாயமடைந்த நிலையில், விபத்து நேரிட்டபோது அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பலர் அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றதையும் காணமுடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments