சசிகலாவை தவறாகப் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது... எங்கே இருந்தாலும் நாங்கள் அவரை போற்றுவோம் - கோகுல இந்திரா

சசிகலாவை தவறாகப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் எங்கிருந்தாலும் தாங்கள் மரியாதையுடன் போற்றுவோம் என்றும் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா தெரிவித்தார்.
முதலமைச்சரையும் பெண்களையும் இழிவாகப் பேசியதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியைக் கண்டித்து சென்னை அண்ணாநகரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கோகுல இந்திரா, சசிகலா ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் என்றும் ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் கூறினார்.
அதிமுகவில் இருந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் சசிகலா ஒதுக்கி வைக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. வரும் 27ந் தேதி சசிகலா சிறையில் இருந்து வெளியாக உள்ள நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள கோகுல இந்திரா ஆதரவாக பேசியுள்ளார்.
Comments